Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் தொடரும் குப்பை பிரச்சினை: அசுத்தமடையும் வாவி!

In இலங்கை
Published: 09:06 GMT, Sep 20, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Vithushagan
DSC00907

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் கழிவுகளை அகற்றுவதற்கு உள்ள தடைகள் காரணமாக இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் வாவியான மட்டக்களப்பு வாவி அசுத்தமடையும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக கடந்த 20 நாட்களாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாத நிலையே இருந்துவருகின்றது.

இதுவரை காலமும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை சிலர் வீடுகளிலேயே முகாமைத்துவம் செய்த நிலையில் சிலர் வீதிகளிலும் வாவிக்கரையோரங்களிலும் வீசிவருகின்றனர்.

வாவிக்கரையின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் வீசப்படுவதன் காரணமாக மட்டக்களப்பு வாவி அசுத்தப்படுவதன் காரணமாக வாவி அசுத்தமடையும் நிலையேற்பட்டுள்ளது.

அத்துடன் வாவியில் இருந்து கடலுக்கு நீர்வெளியேறும் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக கடலில் மீன்பிடிக்கும்போது வலைகளில் குப்பைகள் சிக்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிட்டால் அது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினையாக மாற்றமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

DSC00910

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg