Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பதவி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது: நீதிமன்றம்

In இந்தியா
Updated: 09:34 GMT, Sep 20, 2017 | Published: 09:34 GMT, Sep 20, 2017 |
0 Comments
1204
icon_com
This post was written by : Risha
chennai

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர்களின் பதவி நீக்கம் தொடர்பில் முதலமைச்சர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, சட்டமன்ற செயலாளர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மேற்படி வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg