Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

In இலங்கை
Published: 09:24 GMT, Sep 20, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Arul Jesu

வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று (புதன்கிழமை) காலை மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் குறித்த உப அலுவலகம் இன்று புதன் கிழமை காலை 8.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வமத தலைவர்களின் ஆசியுடன் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சி.ஏ.சந்திரையா, டெலோ மாவட்ட அமைப்பாளர் இராஜேந்திரம் பற்றிக், டெலோ முக்கியஸ்தர் கணேசலிங்கம் சொக்கன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

DSC_0097 DSC_0107

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg