Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேரினவாதத்தின் எதிர்ப்பு: துக்கியெறியப்பட்டது காணாமல் போனோர் குறித்த சட்டமூலம்!

In இலங்கை
Published: 11:12 GMT, Sep 20, 2017 |
0 Comments
1532
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இலங்கையில் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் வகையிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டமூலத்திற்கு பெரும்பான்மை சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து குறித்த சட்டமூலம் நீக்கப்பட்டு, அதன் விவாதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் மீள விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாதென தெரிவித்துள்ள பெரும்பான்மை சமூக அமைப்புகள், இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்தன.

ராணுவ அமைப்புக்கள், சிங்கள அமைப்புக்கள் ஆகியவற்றோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சர்வதேசத்தின தலையீடு இலங்கை மீது ஏற்படும் என்றே பெரும்பான்மை சமூகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டு அதுகுறித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தாமை மற்றும் தற்போது இச் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமை போன்ற விடயங்கள் பாதிக்கப்பட்டோர் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெற்று வருவதோடு, அதன் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரி பங்கேற்றுள்ளார். இதன்போது முகங்கொடுக்கும் சவால்களை சமாளிப்பதற்காகவே, காணாமல் போனோர் குறித்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg