Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மர்மப்பொதி: லீவர்பூல் பகுதியில் தீவிர சோதனை

In
Published: 11:15 GMT, Sep 20, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Suganthini
uk

சந்தேகத்துக்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து லண்டன், லிவர்பூல் ரயில் நிலையப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையின் பொலிஸாரால் அங்கிருந்து இன்று (புதன்கிழமை) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இடத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மோப்பநாய் சகிதம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் குறித்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறியரக குண்டொன்று வெடித்துள்ளதில், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து, அங்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலைய குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், இதுவரையில் 5 பேரைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg