Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அதிவேக நிலத்தடி போக்குவரத்து அமைப்பாக ரொறொன்ரோ-மொன்றியல் சுரங்கபாதை தெரிவு

In கனடா
Published: 11:46 GMT, Sep 20, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Anojkiyan
hype

அதிவேக நிலத்தடி போக்குவரத்து அமைப்பாக ரொறொன்ரோ-மொன்றியல் சுரங்கபாதை தெரிவாகியுள்ளது.

இந்த அமைப்பு ரொறொன்ரோ-மொன்றியல் ஆகிய இரு நகரங்களிற்கும் இடையிலான பயண நேரத்தை ஐந்து மணித்தியாலங்களில் இருந்து ஆக 39நிமிடங்களாக குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புல்லட் வடிவ குழாய்க்குள் மணித்தியாலத்திற்கு 1,000 கிலோ மீற்றர்கள் வேகத்தில் செல்ல கூடியதாக இருக்கும் எனவும் அதிவேக ரயிலை விட நான்கு மடங்கு வேகமாக ஓடக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் விமான வேகத்தில் நீண்ட தூரங்களை காற்றியக்கவியல் இழுவை காரணமாக சறுக்கி செல்லும் என கூறப்படுகின்றது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த போக்குவரத்து திட்டத்தின் ஊடாக ரொறொன்ரோவில் இருந்து ஒட்டாவா செல்ல 27 நிமிடங்களும், ஒட்டாவா-மொன்றியல் 12நிமிடங்களும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் தெரிவுசெய்யப்பட்ட அதிவேக நிலத்தடி போக்குவரத்து அமைப்புகளில் அமெரிக்காவில் நான்கும், ஐக்கிய இராஜ்யத்தில் இரண்டு, இந்தியாவில் இரண்டு மற்றும் மெக்சிக்கோ ஒன்றும் உள்ளடங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg