Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த உ.பி. அரசு அதிரடி

In இந்தியா
Published: 12:23 GMT, Sep 20, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Risha
hooch-up_650x400_81468729430

கள்ளச்சாராயம் அருந்தி எவரேனும் உயிரிழப்பின், அதனை தயாரித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான அதிரடி தீர்மானமொன்றை உத்தரப் பிரதேச அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கள்ளச்சாரயம் அருந்து எவரேனும் உயிரிழந்தாலோ அல்லது ஊனமடைந்தாலோ அதனை தயாரித்தவருக்கு 10 லட்சம் அபராதம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதமும், மரண தண்டனையும் இரண்டும் வழங்கப்படவும் வாய்ப்புல்லது.

இந்த தண்டனையானது கள்ளச்சாராயத்திற்கு எதிராக ஏற்கனவே உள்ள சட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பண்டிகைக் காலங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரிக்கும் அதேவேளை, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg