Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயன் ஜயலத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

In இலங்கை
Published: 12:53 GMT, Sep 20, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Vithushagan
729453826Rayan_Jayalath_L-720x450-1-720x450

மருத்துவ பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) மாளிகாகந்தை பிரதான நீதவான் எஸ். வீரதுங்க முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்ததுடன், அங்குள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் ரயன் ஜயலத்தை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேற்படி உத்தரவைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி சட்டத்தரணி மூலம் நீதிமன்றில் முன்னிலையில் ஆஜரான அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg