Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சாதனை படைக்கும் மெர்சல்: திரும்பி பார்க்க வைத்த விஜய்!

In சினிமா
Updated: 17:21 GMT, Sep 20, 2017 | Published: 17:18 GMT, Sep 20, 2017 |
0 Comments
3102
icon_com
This post was written by : Vithushagan
Merasal-720x450

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது.

இதில், முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 130 கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு தனியாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கவுள்ளது.

இதுவரை வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன் சிங்கிள் டிராக் போன்றவை சாதனை படைத்த நிலையில், மெர்சல் டீசரும் சாதனை படைக்கவுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக வெளியான மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஒரு மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து புதிய சாதனை படைத்தது. அப்போது டுவிட்டர் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து ஆளப்போறான் தமிழன் சிங்கிள் டிராக் வெளியானது. தற்போது வரை ஆளப்போறான் தமிழன் சிங்கிள் டிராக்கை ஒரு கோடிக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg