Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேல் நீதிமன்றின் உத்தரவு மீறல்: காவிரி நீரைக் கொடுக்க எதிர்க்கும் அமைச்சர்

In இந்தியா
Updated: 03:40 GMT, Sep 21, 2017 | Published: 03:40 GMT, Sep 21, 2017 |
0 Comments
1202
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடக அரசு எதிர்க்கும் எனவும் அம்மாநில நீர்வளத்துறைஅமைச்சர் எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  காவிரி மேலாண்மை அமைப்பதற்கு நீதிமன்றினால்  அனுமதி வழங்கப்பட்ட பின்னர் பணியை மேற்கொள்ள தாமதிப்பது ஏன்? என மேல் நீதிமன்றம் அண்மையில் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது.  இது குறித்து பேசும் போது  நீர்வளத்துறை  அமைச்சர்   எம்.பி.பட்டீல் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும், அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. அதுபோன்ற வாரியத்தை அமைக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், அப்படி அமைப்பதற்கான உத்தரவை மேல் நீதிமன்றம் பிறப்பித்தால் அது அதிகார மீறலாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து  முதல் அமைச்சர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது,  மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையின்படி காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படுவதை கர்நாடக அரசு எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg