Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசு என் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறது: அமைச்சர் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 06:12 GMT, Sep 21, 2017 | Published: 06:12 GMT, Sep 21, 2017 |
0 Comments
1206
This post was written by : Kemasiya

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் என் தொலைபேசி உரையாடலை மத்திய அரசு ஒட்டு கேட்கிறது என்று சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போது சித்தராமையா இவ்வாறு குற்றம் சுமத்தியள்ளார். பெங்களூரில் சமீபத்தில் நடந்த பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய  முன்னாள் துணை முதல்வர் அசோக், சித்தராமையா உளவுத்துறை மூலமாக பா.ஜனதா நிர்வாகிகளின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருகிறார். இதன் மூலம் எங்களின் தேர்தல் வியூகத்தை காங்கிரஸ் அறிந்து காய்களை நகர்த்தி வருகிறது. அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கூறும் முகமாகவே சித்தராமையா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நான் யாருடைய தொலை பேசி உரையாடலையும் ஒட்டு கேட்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கும் அளவுக்கு காங்கிரஸ் அரசு தரம் தாழ்ந்து விடவில்லை.

ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசுதான் என் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கிறது. மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருவதாக ஏற்கனவே முறைப்பாடுகள் உள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg