Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒன்பது போட்டிகளில் எட்டு சதங்கள்: ஒய்வின் பின்னும் அதிரடி காட்டும் சங்கா

In கிாிக்கட்
Updated: 05:36 GMT, Sep 21, 2017 | Published: 05:35 GMT, Sep 21, 2017 |
0 Comments
2812
icon_com
This post was written by : Anojkiyan
sanga

சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, இங்கிலாந்தில் நடைபெறும் முதற்தரப்போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் களமிறங்கி எட்டு சதங்களை பூர்த்தி செய்து சாதனைப்படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் முதற்தரப்போட்டிகளில் சாரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்ககார, தற்போது நடைபெற்றுவரும் சொமர்செட் அணிக்கெதிரான போட்டியில், 189 பந்துகளை எதிர்கொண்ட சங்கா, 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இந்த சதத்தின் மூலம் அவர் இப்பருவ காலத்தின் எட்டாவது சதத்தை பூர்த்திசெய்தார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 13 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய சங்கா, 8 சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் அடங்களாக 1369 ஓட்டங்களை குவித்துள்ளார். 124.45 சராசரி ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg