Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார் பிரதமர் ரணில் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 10:36 GMT, Sep 21, 2017 | Published: 05:12 GMT, Sep 21, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
3624-his-first-interview-given-to-hiru-tv-explains-prime-minister-ranil-wickramasingha-in-parliament-speaker-requested-hold-inquiry-over-allegations-made-by-sirasa753061749

அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சற்றுமுன் நாடாளுமன்றின் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பின் வருகிறது அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை

அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ள குறித்த அறிக்கையுடன், ஒவ்வொரு அரசியல் கட்சியும் எழுத்து மூலம் வழங்கிய யோசனைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

குறித்த அறிக்கை மீதான விவாதம் அடுத்த மாதம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும், அதன் பின்னர் அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்த வழிநடத்தல் குழுவின் உபகுழுக்களது அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வழிநடத்தல் குழுவின் அறிக்கை கடந்த ஓகஸ்ட் மாதம் முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் குறித்த அறிக்கை பிற்போடப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றிற்கு வருகின்றது.

இதேவேளை, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறை, வடக்கு கிழக்கு இணைப்பு, ஆளுநர்களுக்கான அதிகாரங்களை குறைத்தல் மற்றும் மதச்சார்பற்ற நாடு உள்ளிட்ட விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ் அறிக்கையில் முன்வைத்துள்ளதோடு, இவற்றிற்கு இரு பிரதான கட்சிகளும் இணங்கினால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg