Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை – ஜப்பான்

In
Published: 06:12 GMT, Sep 21, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Risha

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமில்லை. இது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான தருணம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னர் நேற்று (புதன்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்ற பங்குச்சந்தை முதலீட்டார்களுடனான சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த பிரதமர், ”வடகொரியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் வகையிலான தீர்மானங்களை முன்னெடுப்பது அவசியம். இனியும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமில்லை.

இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், பொருளாதார தடைகளை அமுல்படுத்தவும் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

ஜப்பானின் நிலைப்பாட்டிற்கு மாறாக, ஜப்பானின் ஆசிய போட்டியாளரான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், பியோங்யாங்கின் ஆயுதத் திட்டங்கள் மீதான நெருக்கடியை தீர்ப்பதற்கு வடகொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg