Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிகோவை தொடர்ந்து ஜப்பானை உலுக்கிய பூகம்பம்

In
Updated: 06:37 GMT, Sep 21, 2017 | Published: 06:37 GMT, Sep 21, 2017 |
0 Comments
1371
icon_com
This post was written by : Risha
japan e

ஜப்பானின் கடற்கரை பகுதியில் ஃபுகுஷிமாவின் கிழக்கே 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

கடந்த 24 மணி நேரங்களில் இடம்பெற்ற மூன்றாவது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் 225 பேர் உயிரிழந்த நிலையில், நியூசிலாந்திலும் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இதேவேளை, கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேரின் உயிர் காவுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg