Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

20 வருடங்களில் தமிழகத்தில் தண்ணீர் இருக்காது

In இந்தியா
Updated: 07:22 GMT, Sep 21, 2017 | Published: 07:22 GMT, Sep 21, 2017 |
0 Comments
1272
This post was written by : Kemasiya

தமிழகத்தில் நீர்நிலை பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என தமிழ்நாட்டு வேளாண்மை பல்கழைக்கழக நீரியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் பி.ஜே பாண்டியன் எச்சரித்துள்ளார்.

மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில் வளம் குன்றா மீள்திறன் ஒன்றுகூடல் அரங்கு-2017 நிகழ்ச்சி, தமுக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. நான்கு நாட்கள் இடம்பெறுகின்ற இவ் விழாவின்  தொடக்க நாளில் உரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இதில் பங்கேற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீரியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் பி.ஜே பாண்டியன் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் 17 ஆறுகள் 40 ஆயிரம் ஏரிகள் குளங்கள் உட்பட நீர்நிலைகள் 35 இலட்சத்திற்கும் மெற்பட்ட கிணறுகள் என்பன உள்ளன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இவற்றை பராமரிக்காததன் விளைவாக நீர்நிலைகளில் தண்ணீர்க் கொள்வனவு 50 சதவீதம் குறைந்துள்ளது. 35 இலட்சம் கிணறுகள் இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லை.

இதற்கு காரணம் நீர்நிலைகளில் தொடர்ந்து தண்ணீரை உறுஞ்சிய நாம் மீண்டும் தண்ணீர் வரத்து மறு ஊட்டம் பற்றி யோசிகாவில்லை.  இதுவே வறட்சிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg