Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 07:24 GMT, Sep 21, 2017 | Published: 07:24 GMT, Sep 21, 2017 |
0 Comments
1303
This post was written by : Varshini

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மேல் நீதிமன்றம் நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நீதிமன்ற தீர்ப்பை தமக்கு காட்டுமாறும், அதுவரை குப்பைகளை கொட்ட அனுமதிக்கப் போவதில்லையென்றும் தெரிவித்து, குப்பை லொறிகளை மறித்து இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி ஏற்பட்ட தீயினை அடுத்து, அங்கு திண்மக்கழிவு முகாமைத்துவத்தை நிறுத்துமாறு கோரி பொதுமக்களால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து, குறித்த பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

இத் தடை உத்தரவை எதிர்த்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாநகரசபை வழக்குத் தாக்கல் செய்தது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை நீக்கி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, திருப்பெருந்துறைக்கு இன்று காலை குப்பை லொறிகள் சென்ற நிலையில், மக்கள் அவற்றை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குப்பைகளுடன் லொறிகள் நடு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

batticaloa protest (3) batticaloa protest (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg