Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெக்சிக்கோ நிலநடுக்கத்தில் கனேடியர்களுக்கு பாதிப்பு இல்லை!

In கனடா
Published: 08:44 GMT, Sep 21, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Anojkiyan
nbc

மெக்சிக்கோவில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கனேடியர்கள் எவரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

மெக்சிக்கோவை தாக்கியுள்ள இந்த நிலநடுக்கம் இவ்வளவு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து வருத்தமடைவதாகவும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், மெக்சிக்கோவில் உள்ள கனேடிய தூதரகம், உதவி தேவைப்படும் கனேடியர்களுக்கான அவசரகால தொலைபேசி இலக்கத்தையும், மின்னஞ்சல் முகவரியையும், சமூகவலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலான அறிவித்து வருகிறது.

மெக்சிக்கோ நகரில் இருந்து சுமார் 123 கிலோமீட்டர் கிழக்கே உள்ள றபோசோ பகுதியை நேற்று (புதன்கிழமை) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கிய நிலையில், அங்கு சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg