Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை சிறையில் சந்தித்தார் தினகரனின் மனைவி

In இந்தியா
Updated: 09:00 GMT, Sep 21, 2017 | Published: 09:00 GMT, Sep 21, 2017 |
0 Comments
1284
This post was written by : Kemasiya

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி, மற்றும் தினகரனின் மனைவி டாக்டா அனுராதா தினகரன், ஆகியோர்  சந்தித்து பேசியுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) இந்தந் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வழக்கமாக 15 நாட்களுக்கு ஒரு முறை சசிகலாவை சந்தித்து பேசுவதற்கு உறவினர்களுக்கு அனுமதியுள்ளது. அதன்படி கடந்த 17 நாட்களுக்கு முன்பு தினகரன் சந்தித்திருந்தார். அதன் பின்னர் நேற்று அவரது மனைவி சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்கள் சந்திப்பின்  போது என்ன பேசிக் கொண்டார்கள் என்னும் விடயம் இதுவரை தெரியவில்லை எனவும் சந்திப்பின் பின்னர் அவர்கள் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை எனவும் தெரிய வருகின்றது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg