Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரொறன்ரோ கபேஜ்டவுன் பகுதிக் குடியிருப்பில் பாரிய தீ விபத்து

In கனடா
Updated: 09:15 GMT, Sep 21, 2017 | Published: 09:07 GMT, Sep 21, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Anojkiyan
sherbourne-apartment-fire

ரொறன்ரோ கபேஜ்டவுன் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பாரிய தீவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஷேர்போர்ன் வீதி மற்றும் கார்ள்ட்டன் வீதிப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின், நான்காவது மாடியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 அளவில் இந்த தீப்பரவல் ஆரம்பித்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், குடியிருப்பினுள் சிக்குண்டிருந்த எட்டுப் பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் சிலர் கட்டிடத்தின் உட்புறம் வாயிலாகவும், மேலும் சிலர் ஏணிகள் மூலம் வெளிப்புறமாகவும் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனவும், சிலருக்கு மூச்சுத் திணறலுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg