Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 09:39 GMT, Sep 21, 2017 | Published: 09:37 GMT, Sep 21, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Kemasiya
protest

தமிழ்நாட்டு மீனவர்கள் காங்கிரஸ் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்ப்படுவதை கண்டித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு மீனவர்கள் காங்கிரஸ் சார்பில், இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள், காங்கிரஸ் தலைவர் எம்.கஜநாதன், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி, சரக்கு பெட்டக மாற்று முனையத்தை கைவிடக் கோரியும், கோஷங்களை எழுப்பியவாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg