Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டன் முட்டை சொப்ஸ்

In
Updated: 09:44 GMT, Sep 21, 2017 | Published: 09:44 GMT, Sep 21, 2017 |
0 Comments
1211
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

ஆடு இறைச்சி – 500 கிராம்
முட்டை – 4
மிளகு – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கசகசா – அரை ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்

பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிதளவு
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
மிளகாய் – 12
தேங்காய் – 2 சில்
மஞ்சள் தூள் – சிறிதளவு.

செய்முறை

ஆடு இறைச்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து தனியே வைக்கவும். மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த மசாலாவை ஆடு இறைச்சியுடன் போட்டு நன்றாக பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு அடுப்பில் ஆடு இறைச்சியுடன், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக வைக்கவும். அடுப்பில் அழுத்ம இறங்கியதும் சிறிதளவு நீர் இருக்கும் அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளறி தண்ணீர் முழுவதும் வற்றும் வரை விடவும். மற்றொரு அடுப்பில் பொறிக்கும் அளவிற்க்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்த கறியை முட்டையில் நனைத்து எண்ணெயில் போடவும். உடனுக்குடன் திருப்பி போட்டு எடுக்கவும். சூப்பரான மட்டன் முட்டை சொப்ஸ் சாப்பிட தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg