Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மகளுக்கு சூடு வைத்த தாய்க்கு பிணை

In இலங்கை
Published: 09:17 GMT, Sep 21, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Arul Jesu
a3 -

ஏறாவூரில், தனது எழு வயது மகளுக்கு கரண்டியால் சூடு வைத்து காயமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியின் தாய்க்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு மூன்று தினங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியின் தாய், நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன் போது சந்தேக நபரை தலா ஒரு இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்ததோடு வழக்கு விசாரணையை அடுத்த வருடம் (2018) பெப்ரவரி மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஏறாவூர்; பள்ளியடி வீதியில் வசிக்கும் இவர் தங்க மோதிரம் ஒன்றை தொலைத்தமைக்காக தனது மகளுக்கு நெஞ்சுப் பகுதி, கால்பாதம், கைகள், வயிற்றுப் பகுதி ஆகிய அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்துள்ளார்.

சிறுமியின் அழு குரல் கேட்ட அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததற்கு அமைய குறித்த தாய் கைது செய்யப்பட்டிருந்தார்.

காயமடைந்த சிறுமி தற்போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

a1 - a2 -

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg