Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற்றிற்கு முன் எல்லை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: EU

In
Updated: 09:34 GMT, Sep 21, 2017 | Published: 09:33 GMT, Sep 21, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Risha
Euuu

வடக்கு அயர்லாந்திற்கும், அயர்லாந்திற்கும் இடையிலான எதிர்கால எல்லை உடன்படிக்கை தொடர்பான பிரச்சினைக்கு பிரித்தானியா தீர்வு காண வேண்டியது அவசியம் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெக்சிற் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே இதற்கு விரைந்து தீர்வொன்றை பெறுவது அவசியமாகும்.

2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான அயர்லாந்திற்கும், பிரித்தானியாவின் வட அயர்லாந்திற்கும் இடையிலான கடுமையான எல்லை பிரச்சினையை தீர்ப்பது குறித்து பிரித்தானியாவின் பதிலை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.

இந்த எல்லை பிரச்சினை தற்போது வெளிப்படையாக தெரியாத போதிலும், வட அயர்லாந்திற்கு பிரித்தானியாவும், அயர்லாந்தும் பல தசாப்தங்களாக உரிமை கோரி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg