Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்பு

In இந்தியா
Published: 09:52 GMT, Sep 21, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Kemasiya
dfgewe

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 7 பேரும், பொதுமக்களில் 10 பேரும் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை (வியாழக்கிழமை)  பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் 10 பேரும், சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் 7 பேரும் காயம் அடைந்தனர். சக பொலிஸார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் பொதுப்பணித்துறை அமைச்சர் அக்தர் இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் எஸ்.எஸ்.பி. தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg