Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிராந்தியங்களின் தற்போதைய நிலை குறித்து பிரான்ஸ்- பிரித்தானியாவுடன் பேச்சு

In
Updated: 10:12 GMT, Sep 21, 2017 | Published: 10:11 GMT, Sep 21, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Risha
gg

இருதரப்பு உறவு மற்றும் பிராந்தியங்களின் தற்போதைய பிரச்சினைகள் என்பன தொடர்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங் யீ, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளியுறத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் அமைச்சருடனான சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, ”ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் ஆட்சியில் சீனா- பிரானஸ் இடையே விரிவான மூலோபாய பங்காளித்துவத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டு அனைத்து விடயங்களிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராகவுள்ளது” என்றார்.

பிரான்ஸ் அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து போரிஸ் ஜொன்சனை சந்தித்த வோங் யீ, ”சீனா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையே தூதரக மட்டத்தில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் 45 வருடங்களாகின்றன.

இந்த நல்லுறவை தொடர்ந்து சிறப்பாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இருதரப்பு ஒத்தழைப்பை ஆழப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg