Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மட்டு. மாநகரை துரிதமாக சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்!

In இலங்கை
Updated: 09:51 GMT, Sep 21, 2017 | Published: 09:49 GMT, Sep 21, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Vithushagan
2

மட்டக்களப்பு  மாநகரை துரிதமாக  சுத்தம் செய்யும் பணியில் இன்று  (வியாழக்கிழமை) தொடக்கம் சுமார் 100 நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 12 மணிநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரக் கழிவுகளை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த  இடைக்காலத் தடையை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை நீக்கியதையடுத்து இந்த சுத்தம் செய்யும் பணிகள் நகரெங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கென தமது மாநகர ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளார்கள். வழமையாக காலை 6 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை கடமை புரியும் ஊழியர்கள் தற்போதைய அவசர சூழ்நிலை காரணமாக காலை 6 மணி தொடக்கம் மாலை 6 வரை கடமை புரியவுள்ளார்கள். இதற்கென மேலதிக நேர ஊதியத்தையும் அவர்கள் பெறுவார்கள் என  குறிப்பிட்டார்.

அதுபோல மட்டக்களப்பு மாநகரப் பிரிவுக்குள் வாழும் மக்கள்  கடந்த சுமார் ஒரு மாதகாலமாக பல்வேறு அசௌகரியங்களுடன் பொறுமையாக தமது இயல்பு நிலையைக் கடைப்பிடித்து வந்தனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நீக்கியது மட்டக்களப்பு மாநகர மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என தெரிவித்தார்.

தொடர்ந்தும் எத்தகைய இடைஞ்சல்கள் தடைகள் வந்தாலும் மக்கள் நகரைத் துப்புரவாக வைத்திருப்பதில் பூரண ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் மாநகர சபைக்குத் தரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி திடீரென தீ பரவத் தொடங்கியதை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்குமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg