Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லிச்சி பழத்தின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

In
Published: 10:57 GMT, Sep 21, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Anojkiyan
lyv

தனித்தன்மை வாய்ந்த லிச்சி பழத்தில் ஏரளாமான மருத்துவ குணங்கள் உள்ளன. உடல் பருமன், புற்று நோயை தடுப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, எலும்புகளை வலுவாக்குவது, செரிமானத்தை சரிசெய்வது, இரத்த அழுத்தத்தை குறைப்பது, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து போராடுவது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை இந்த பழத்தினால் உண்டாகும் நன்மைகளும்.

லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் மற்ற காய்கறி பழங்கள் போல, இதுவும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடல் தசைகளை மென்மையாக்கி வேகமான செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது.

லிச்சியில் உள்ள குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். அஸ்கோர்பிட் அமிலம் என்ற அமிலத்தில் தினசரி உட்கொள்ளலில் 100 சதவிதம் இந்த லிச்சியில் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதுவே சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பணியாகும். லீச்சியில் உள்ள ப்ரோ அந்தோசைடனின் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த ஆய்வுகள் அவற்றின் வைரஸ் எதிர்ப்பு சக்திகளை நிரூபிக்கின்றன. லிச்சீடன்னின் ஏ2 என்னும் லிச்சியில் காணப்படும் ஒரு கலவை, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் மற்றும் காக்ஸ்சாக்கி வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் பரவுதலை தடுக்கிறது.

லிச்சியில் காணப்படும் பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் ப்ரோ அந்தோசைடனின் என்ற கூறுகளும் வைட்டமின் சியை விட அதிக சக்தி வாய்ந்தது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் மற்றும் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கின்றன.
இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகளால் புற்று நோய், இதய நோய், குடல் இயக்க மந்த நிலை, விரைவான வயது மூப்பு, போன்றவை ஏற்படும். இந்த பாலிபீனாலிக் கூறுகளால் இந்த அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

லிச்சியில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் உடலில் நீர் சக்தியை சமன் செய்கிறது. சோடியம் அளவு குறைந்திருக்கிறதும் இதே பயன் பாட்டிற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தின்போது நீரின் சமமான தன்மை ஒரு முக்கிய பகுதி ஆகும். இதன்மூலம் ஹைபர் டென்ஷன் குறைக்கப்படுகிறது. பொட்டாசியம் ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுவதால், இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் ஒடுக்கமான தன்மை குறைகின்றது. இதன்மூலம் இதய அழுத்தம் குறைகிறது, உலர் லிச்சியின் பொட்டாசியம் அளவு பிரெஷ் லிச்சியை விட 3 மடங்கு அதிகமாகும்.

தாமிரம் லிச்சி பழத்தில் அதிக அளவு காணப்படுகிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் பொதுவாக இரும்பு சத்துக்களுடன் தாமிரமும் இணைந்திருக்கும். இதனால் லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும். உடல் உறுப்புகளுக்கும் செல்களுக்கும் ஆக்ஸிஜென் வேகமாக கிடைக்கப்பெறும். லிச்சியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. இந்த பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது மூக்கில் இரத்தம் வருதல், காய்ச்சல், வறண்ட தொண்டை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg