Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈராக்கிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை

In உலகம்
Updated: 12:44 GMT, Sep 21, 2017 | Published: 12:25 GMT, Sep 21, 2017 |
0 Comments
1252
icon_com
This post was written by : Risha
iraq

ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் அல் ஹவியா மாவட்டத்தின் மையமாக திகழும் ஹவிஜாவிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் வகையில் ஈராக் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் அறிவித்தலுக்கு அமைய இன்று (வியாழக்கிழமை) மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.- இன் பிடியிலுள்ள ஹவிஜா பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பிராந்தியத்திலிருந்து சுமார் 85 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஈராக்கின் பல பகுதிகள் ஐ.எஸ். பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், பக்தாத்தின் வடக்கு உள்ள ஹவிஜா, சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு பகுதி மற்றும் ஈராக் தலைநகரின் மேற்கு பகுதி ஆகியன மாத்திரமே ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg