Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனை சந்தித்த கெஜ்ரிவால்: அரசியலுக்கு நங்கூரமா?

In இந்தியா
Published: 12:13 GMT, Sep 21, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Vithushagan

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீப காலமாக மத்திய மாநில அரசுகளை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போய் தற்போது கமலின் அரசியல் பிரவேசத்தை தமிழக மக்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  நடிகர் கமல், ‘நாங்கள் பேசியது என்னவாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடியும் என்றும், ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றும் கூறினார்.

ஊழலை எதிர்த்துப் போரிடுவதுதான் எங்களுடைய இலக்கு என்றும் அந்த கொள்கைக்காகப் போராடுபவன் என்ற பெயரும் ஒரளவுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கெஜ்ரிவால், ‘ஊழலும், மதவாத சக்திகளும் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் குறித்து இருவரும் விவாதித்தோம் என்றும் தெரிவத்தார். மேலும், நேர்மைக்கு, தைரியத்துக்கு, பெயர் பெற்ற கமல் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும்’ என்றார்.

IMG_4198 IMG_4192 IMG_4209

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg