Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆச்சிபுரம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய அனந்தி!

In இலங்கை
Published: 15:25 GMT, Sep 21, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : Vithushagan
DSC03362 (1)

வவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவு எல்லைக்கிராம மக்களை வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துவரும் குறித்த மக்கள், தமது இன்னல்களை நேரடியாக வட மாகாண அமைச்சர் வந்து பார்வையிட வேண்டும் என் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஒளிச்சுடர் சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இந் நிலையில் இக்கிராமத்தில் சுயதொழில் முயற்சிக்கான ஏற்பாடுக வட மாகாண சபை செய்து தரவேண்டும் என ஒளிச்சுடர் அமைப்பினால் கோரிக்கை மனுவும் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

DSC03361

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg