Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:21 GMT, Sep 21, 2017 | Published: 16:21 GMT, Sep 21, 2017 |
0 Comments
1380
This post was written by : Sivaguru Siva

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புப்பணியாளர்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

நிலநடுக்கத்தால் இடிந்துவீழுந்த பாடசாலைக்கட்டிடம் ஒன்றில் மேசை ஒன்றுக்குகீழ் உயிருடன் 12 வயது சிறுமி ஒருவர் கண்டுபிடிக்கபட்டார்.

எனினும் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேற்படி சிறுமியை மீட்க்கும் வழிதெரியாமல் மீட்புப்பணிக்குழு  இந்த சவாலை எதிர்கொள்கிறது.

பாடசாலைக்கட்டிடத்தில் 21 சிறார்கள் உட்பட்ட 26 பேர்  பலியாகியிருந்தனர். மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்களுக்கு  மெக்சிகோவில் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

000

_97957307_65099a3f-0a55-49a1-aad4-a9bd31df0d2a

சுதந்திர கத்தலோனா இயக்க ஆதரவாளர்கள் இன்று பார்சலோனா உயர் நீதிமன்ற வளாக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

எதிர்வரும் முதலாம் திகதி சுதந்திர கத்தலோனாவுக்குரிய வாக்கெடுப்பை நடத்த முயன்ற ஆர்வலர்கள் 15 பேரை ஸ்பெயின் காவற்துறை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தது.

இதனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத்;தெரிவித்து நேற்றும் இன்றும் பார்சலோனாவில் மக்கள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

கத்தலோனாவில் குடியொப்ப வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஸ்பெயின் நீதித்துறையால் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

migrants2016-3

லிபியாவில் சட்டவிரோத குடியேறிகளின் படகு ஒன்று கவிழ்ந்தில் 90 பேர் காணமல் போயுள்ளனர்.  இதுவரை எட்டுப்பேர் மரணமடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்கு செல்லும் நோக்குடன் சட்டவிரோத பயணத்தை இவர்கள் மேற்கொண்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

219353731294226027367196204003717n

இந்தியாவின் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சென்னையில்  நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப்பேசி கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தமை அரசியல் வட்டாரங்களில் முக்கிய செய்தியாகியுள்ளது.

ஊழலையும் மதவாதத்தை எதிர்க்கும் தைரியமும், நேர்மையும் கமல்ஹாசனுக்கு இருப்பதால் அவரது அரசியல் பிரவேசம் முக்கியமானது எனவும் அரவிந்த் கேஜ்ரிவால் குறிப்பிட்டார்.

இருவரும் தனியாக சுமார் ஒரு மணி நேரம்; பேசிய பின்னர்  ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்தச்சந்தர்ப்பத்தில் ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் தனக்கு உறவினர்களென கமல்ஹாசன் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

722108873_B979316459Z.1_20160728171731_000_G3H7ABF12.1-0.png

மக்களைப் பெற்ற மகாராசி குறித்து கேள்வியுற்றிருப்பீர்கள் ஆனால்   பிரித்தானியாவில் வாழும் மக்களைப்பெற்ற மகாராசியான சு றட்போட் குறித்து உங்களுக்குத்தெரியுமா?

42 வயதான சு றட்போட் தனது இருபதாவது குழந்தையை இந்தவாரம் பிரசவித்துள்ளார். தங்களுக்கு இருபது குழந்தைகள் இருப்பது குறித்து அவரது கணவரான 46 வயதான நோயலுக்கும் கொள்ளை மகிழ்ச்சி. இதுதான் தங்களுடைய இறுதிக்குழந்தை இனிமேல் வேண்டாம் என்றகிறார் அவர்.

nintchdbpict000354617810

20 பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காகவே பிரித்தானியாவில் பிரபலமான இந்த குடும்பத்தில் 11 ஆண்குழந்தைளும் 9 பெண்குழந்தைகளும் இருக்கின்றனர்.

nintchdbpict000018004872

இவர்களின் மூத்தமகளான 23 வயதுடைய சோபிக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதால் இவர்களுக்கு தாத்தா பாட்டி அந்தஸ்து வேறு உள்ளது.

பத்து அறைகள் கொண்ட வீடு ஒன்றில் வசிக்கும் இந்தக்குடும்பத்துக்கு தினசரி 18 பைந் பால் தேவைப்படுகி;றது. அவர்களின் குடும்பத்தேவைக்கான  15 இருக்கைகள் கொண்ட மினி வான் ஒன்றும் உள்ளது.

nintchdbpict000323860565

இந்தக்குடும்பம் பெனிபிற் எனப்படும் அரச உதவியில் முற்றாக வாழக்கூடும் என நீங்கள்நினைத்தால் அதுவும் தவறு  கடுமையான உழைப்பே மகிழ்வு என்கிறார். மக்களைப் பெற்ற இந்த மகாராசி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg