புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து!
This post was written by : Vithushagan

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற லொறியே விபத்தின் போது வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் காணப்பட்ட 5 கடைகளை மோதி சேதமாக்கியுள்ளது.
இதன் போது காயமடைந்த லொறின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.