Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 16:29 GMT, Sep 21, 2017 | Published: 16:28 GMT, Sep 21, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Vithushagan
ddbe713417f4cb4eec1a4ff3070fb745_XL

மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஆனந்தன் தலைமையில் குழாய்நீர் விநியோகத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

கல்குடா கல்வி வலயத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் ஆறு பாடசாலைகளுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் இதன்போது இடம்பெற்றது.

சந்திவெளி- சித்தி விநாயகர் வித்தியாயலம், கனிஷ்ட வித்தியாலயம், முறக்கொட்டாஞ்சேனை ராம கிருஸ்ண மிஷன் பாடசாலை, கோரகல்லிமடு ரமண மகரிஷி , கிரான் மத்திய கல்லூரி மற்றும் விவேகானந்தா வித்தியாயலம் ஆகிய பாடசாலைகளுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகளது அறிக்கையில் குறித்த பிரதேசத்து நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று தெரிக்கப்பட்டதையடுத்து பாடசாலை மாணவர்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி வேல்ட் விஷன் கிரான் பிராந்திய அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் ஹிந்துறோஹாஸ், சுகாதாரம் மற்றும் போஷாக்குத்திட்ட அதிகாரி ரீ. றொசாந்தன் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg