Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சசியின் இயக்கத்தில் ’ரெட்டை கொம்பு’

In சினிமா
Published: 17:29 GMT, Sep 21, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Vithushagan
gvprakashsasi

இயக்குனர் சசி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ‘ரெட்டை கொம்பு’ என்ற படத்தை   இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சசி இறுதியாக விஜய் அண்டனியை வைத்து இயக்கிய படம் ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சக்கைபோடு போட்டது. தற்போது இயக்குனர் சசி ‘ரெட்டை கொம்பு’ என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இந்தப் போட்டிக்காக தமிழகமே போராட்டத்தில் இறங்கியது. போராட்டம் வெற்றிகரமாக நடந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஜல்லிக்கட்டு குறித்தே அதிக திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

விஜய்யின் ‘மெர்சல்’, விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ ஆகிய படங்களும் ஜல்லிக்கட்டைப் பற்றி கூறுகினறன. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ஜல்லிக்கட்டு படம் உருவாகிவுள்ளது.

‘பிச்சைக்காரன்’ ’ படத்தை இயக்கிய இயக்குனர் சசி அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் சித்தார்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது. இந்த படத்திற்கு ‘ரெட்டை கொம்பு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘ரெட்டை கொம்பு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg