Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் திரைக்கு வரும் ‘பாகுபலி’ !

In
Updated: 17:49 GMT, Sep 21, 2017 | Published: 17:49 GMT, Sep 21, 2017 |
0 Comments
1600
This post was written by : Vithushagan

’பாகுபலி’யின் இரண்டு படங்களையும் இணைத்து ஒரே படமாக மீண்டும் ‘பாகுபலி’ படத்தை வெளியிடவுள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இண்டு படங்களையும் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களும் உலக அளவில்  பல ஆயிரம் கோடிக்கு வசூலையும் அள்ளி குவித்தது. இந்த நிலையில் இயக்குனர் ராஜமௌலி தற்போது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது ‘பாகுபலி மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களையும் எடிட் செய்து, அதில் முக்கியத்துவம் இல்லாத காட்சிகளை நீக்கிவிட்டு, ஒருசில காட்சிகளின் நீளத்தை குறைத்து, இரண்டு படங்களையும் ஒரே படமாக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் இரண்டு படங்களில் இடம்பெற்ற போர்க்காட்சி இந்த படத்தில் இடம்பெறுமாம். படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் வகையில் எடிட் செய்யவுள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

இந்த படத்தை மீண்டும் வெளியிட ராஜமௌலி முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. கூடிய விரைவில் திரையில் இரண்டு படங்களையும் இணைத்து பார்க்கும் அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg