Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் வாரணாசிக்கான பயணம்

In இந்தியா
Updated: 05:24 GMT, Sep 22, 2017 | Published: 03:33 GMT, Sep 22, 2017 |
0 Comments
1133
This post was written by : Kemasiya

பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் அரச சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் என பா.ஜ.கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) தனது பயணத்தினை ஆரம்பிக்கும்  பிரதமர்,  முதல் நாளில் வாரணாசியில் இருந்து குஜராத் வரை செல்லும் மஹானாமா விரைவு ரயிலை வீடியோ காணொளியில் தொடக்கி வைக்கவுள்ளார்.

மேலும்  மக்களுக்கு பல  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அத்துடன் இராமாயணம் குறித்த அஞ்சல் தலையையும் மோடி வெளியிடுவார் என பா.ஐ.கட்சியினர் கூறியுள்ளனர்.

அதைதொடர்ந்து நாளை, பிரதான் அமைச்சர் அவாஸ் யோஜனா திட்டத்தின கீழ் பயன்பெறுவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி உழைரயாற்றுவார் எனவும்,  பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வாரணாசியில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி மோடி வெற்றி பெற்ற தொகுயாகும். பா.ஜ.கட்சியின் வெற்றியின் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது வெற்றித் தொகுதியான வாரணாசிக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg