Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் அதிரடி

In
Published: 03:48 GMT, Sep 22, 2017 |
0 Comments
1843
icon_com
This post was written by : Risha
tr

வடகொரியாவின் சட்டத்திற்கு முரணான அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்கும் வகையிலான ஆணையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வடகொரியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்குவைத்து இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க கருவூலம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, சீன மத்திய வங்கியானது, பியோங்யாங்குடனான வர்ததக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஏனைய சீன வங்கிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் அண்மைய அணு ஆயுத சோதனையை அடுத்து, வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஐ.நா. ஒப்புதல் அளித்த இரு வாரங்களில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் அழுத்தங்களை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அது உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg