Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதிய அரசியலமைப்பு 13ஐ விடச் சிறந்ததாக இருக்கவேண்டும்: டக்ளஸ்

In இலங்கை
Published: 05:47 GMT, Sep 22, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Ravivarman
epdp4

புதிய அரசியலமைப்பானது 13 ஆவது திருத்தச்சட்டத்தினை விட சிறந்ததாக அமையுமானால் அதனை வரவேற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை ஓர் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம் ஐம்பதிற்கு ஐம்பதாக இருத்தல் வேண்டும்.

அத்துடன் பெண்களுக்கு அரசியலில் சமபங்கு வழங்குவது உறுதிப்படுத்தப்படுவதுடன், முப்படைகளிலும் இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும்.

மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதில் பிரதமர் முன்னெடுக்கும் முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம்” என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg