Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நீதிபதி முன்னிலையில் கைதி தற்கொலை

In கனடா
Published: 06:09 GMT, Sep 25, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Arul Jesu
$ (1)

கியூபெக்கில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஆறு மாதகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

நிக்கோலா பட்ரேவ் என்ற ஆசிரியரே இவ்வாறு ஒருவித திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கியூபெக் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை நேற்று முன்தினம் கியூபெக் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது, அவர் தமது உடலில் ஒழித்து வைத்திருந்த ஒருவகை திரவத்தை நீதிபதிக்கு முன்னாள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

52 வயதான பட்ரேவ் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவரது வீட்டில் இருந்து அதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டில் சிறைதண்டனை அனுபவித்த அவர் மனவிரகத்தியடைந்தமையே தற்கொலைக்கான காரணம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg