Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் போதைப் பொருட்களுடன் இளைஞர்கள் கைது!

In இலங்கை
Published: 07:12 GMT, Sep 22, 2017 |
0 Comments
1195
This post was written by : Ravivarman
S4950003

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள கிழக்கு மாகாண அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையிலான மதுவரி உத்தயோகத்தர்கள் நடாத்திய சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹெரோயினை விற்பனை செய்த ஒருவரும், ஹெரோயினை வைத்திருந்த மற்றொரு இளைஞருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏழு பக்கட் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

S4950005 S4950002 S4950001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg