Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானியா மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்

In
Published: 07:29 GMT, Sep 22, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Risha

பிரதமர் தெரேசா மே-யின் தெளிவான நிலைப்பாட்டை அடுத்தே முடக்கப்பட்டுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்த்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார்.

ரோமிற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த மைக்கல் பார்னியர், இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான நிபந்தனைகள் குறித்து விரைவு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது இன்னும் சாத்தியமே. ஆனால், அதற்கு அடுத்த வாரம் பிரஸ்சல்ஸில் ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் லண்டன் தமது முன்மொழிவுகளை வழங்குவது அவசியம்.

பிரித்தானியாவின் தெளிவான நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள நாம் காத்திருக்கிறோம். அதன்படி புளோரன்சில் இன்று நடைபெறவுள்ள பிரதமர் தெரேசா மே-யின் உரையை கவனமாக கேட்கவுள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg