Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இடைக்கால அறிக்கையில் தமிழ் தரப்பினருக்கு சாதகமான விடயங்கள்!

In இலங்கை
Updated: 12:20 GMT, Sep 22, 2017 | Published: 08:13 GMT, Sep 22, 2017 |
0 Comments
1539
icon_com
This post was written by : Anojkiyan
Parliament

புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் அதிகார பகிர்வை வலுப்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் முன்வைக்கப்பட்ட அரசியல் யோசனைக்கு அடுத்த படியாக தற்போதைய அறிக்கை சாதகமான பல விடயங்களை கொண்டிருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குதவற்காக அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்களின் இடைக்கால அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்அரசியல் அமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கபட்டது.

குறித்த அறிக்கையிலேயே பல முன்னேற்றகரமான அம்சங்கள் அவதானிக்கப்படக் கூடியதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மாகாண ஆளுநர்களுக்கு இதுவரை காலமும் காணப்பட்டு வந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட அதிகாரங்களை தவிர ஏனைய விடயங்களில் மாகாண அமைச்சர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே ஆளுநா் செயற்பட வேண்டுமென குறித்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் மாகாண சபைகளினால் உருவாக்கப்படுகின்ற நியதி சட்டங்களை, ஆளுநா் இரண்டு வாரங்களுக்குள் அங்கீகரிக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் அமைப்பு நீதிமன்றத்தினுடைய பரிந்துரைக்கு சமர்ப்பிக்க வேண்டும். குறித்த காலப்பகுத்திக்குள் எதுவித பதிலையும் ஆளுநா் அளிக்காவிட்டால் குறித்த நியதிச் சட்டம் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று மாகாண சபைகளுக்காக வழக்கப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசு திருப்ப பெறுவதிலும், சில கடப்பாடுகளை வழிநடத்தல் குழு பரிந்துரைத்ததன் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களுக்கு நிச்சய தன்மையொன்று ஏற்படுத்தப்படுகின்றது.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொண்ட குடியேற்ற பிரச்சினைகளை கையாளும் பொருட்டு வழிநடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரையில் அரச காணிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்ற போது காணி அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று மேல் சபையொன்று உருவாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த சபையில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 45 உறுப்பினர்களும் நாடாளுமன்றினால் தெரிவுசெய்யப்பட்ட 10 உறுப்பினர்களுமாக மொத்தம் 55 உறுப்பினர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த சபையின் பெரும்பான்மை ஆதரவின்றி அரசியல் அமைப்பு மாற்றம் போன்ற விடயங்களை நாடாளுமன்றம் மேற்கொள்ள முடியாது அதேபோன்று சாதாரண சட்டங்கள் உருவாக்கப்படுகின்ற போதும் அதுதொடர்பில் மேல் சபைக்கு கருத்துக்கள் இருக்குமாயின் நாடாளுமன்றத்திடம் மீளாய்வை கோர முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

இதேபோன்று தேர்தல் முறை மாற்றம் பொலிஸ் அதிகாரங்கள் என தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்ற பல்வேறு முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்படுவதாகவும் மேலோட்டமாக பார்க்கின்ற போது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை சமஷ்டியின்மை, வடக்கு கிழக்கு இணைப்பின்மை போன்ற உணர்ச்சி பூர்வமான விடயங்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஆரோக்கியமானதாக இதனை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்துவதே இன்றைய அரசியல் சூழலில் சிறந்தது எனவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது:-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg