Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான பொறுப்பை உணர்த்துவாரா மே?

In
Published: 07:54 GMT, Sep 22, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Risha
mmm

பிரெக்சிற் பணிகளை சுமூகமாக முன்னெடுத்து செல்வதற்கு வழிவகுப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு பிரதமர் தெரேசா மே உணர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, புளோரன்சில் பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆற்றவுள்ள உரையானது, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கான முட்டுக்கட்டைகளை தகர்க்கும் முயற்சியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரான நிரந்தர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தும் வகையில், இரு ஆண்டுகளுக்கான இடைநிலை ஒப்பந்தமொன்றையும் அவர் முன்மொழிவார் எனக் கூறப்படுகிறது.

புதிய உறவை ஸ்தாபிப்பதனை பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆக்கபூர்வமாக நோக்குமாயின், இரு தரப்பும் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் செயற்படலாம் என்பதையும் மே-யின் இன்றைய உரையில் புரிய வைக்கவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg