Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் காங்கிரஸ் தவறாக வழிநடத்தப்படுகின்றது: உதுமாலெப்பை

In இலங்கை
Updated: 08:14 GMT, Sep 22, 2017 | Published: 08:14 GMT, Sep 22, 2017 |
0 Comments
1319
This post was written by : Ravivarman

பெருந்தலைவர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் கே.எல்.உபைத்துல்லா தலைமையில் பாலமுனை பிரதான வீதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம், மாகாண சபைகள் திருத்தச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது வட.கிழக்கு மாகாணங்களில் வாழும் நமது சிறுபான்மை மக்களைவிட வட.கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் ஏனைய 07 மாகாணங்களில் வாழும் சிறுபான்மை மக்களுக்கான பிரதேச மாகாண சபை பிரதிநிதித்துவம் இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படப் போகின்றது.

சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் நன்கு திட்டமிட்ட முறையில் பேரினவாத கட்சிகளால் கொண்டு வரப்படுகின்ற போது அதனை எதிர்ப்பதாக மக்களுக்கு காண்பிக்கின்றனர்.

வீரமாக பகலில் பேசிவிட்டு இரவில் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரங்களை பறிக்கும் சட்ட மூலங்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆதரவாக வாக்களிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சமூக நலன் கருதி உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இந்த சமூகத்திற்கு எதனையும் செய்யாது பல்வேறு துரோகங்களை செய்து வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg