Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 09:04 GMT, Sep 22, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Ravivarman

ஊவாபரணகம உடுஹவெர கொத்தலாகொட பிரதேசத்தில் மரக்கறி தோட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

உடுஹவெர கொத்தலாகொட பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பீ.எம்.குணசேகர என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தோட்டத்தில் மரக்கறி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு மிருகங்களிடம் இருந்து பயிரை பாதுகாக்கவென குறித்த நபரால் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Electric Shock (4) Electric Shock (3) Electric Shock (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg