Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பச்சை கோப்பி விதைகளில் இத்தனை மருத்துவ குணங்களா?

In
Updated: 10:39 GMT, Sep 22, 2017 | Published: 09:28 GMT, Sep 22, 2017 |
0 Comments
1199
This post was written by : Anojkiyan

கோப்பி விதையை வறுக்கும் போது அதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் எல்லாம் நீங்கிடும். ஆனால் அவை தான் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. வறுக்காமல் பச்சையாக அப்படியே கோபி விதையை பயன்படுத்தி கோப்பி தயாரித்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும்.

கோப்பி விதையில் இருக்கும் க்ளோரோஜெனிக் ஆசிட் நம் உடலின் மெட்டபாலிசத்தை உயர்த்திடும். கல்லிரலில் இருந்து இரத்தத்தில் கலக்கும் அதிகப்படியான சர்க்கரையை தவிர்க்கச் செய்யும். கிடைக்கும் சர்க்கரையின் அளவு குறைவதால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரையத் துவங்கும். இதனால் உடல் எடை குறைந்திடும்.

பச்சையான கோப்பி விதை டைப் 2 வகை சர்க்கரை நோயை குறைத்திடும். இந்த பச்சை கோப்பியை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்திடும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இதனை குடிக்கலாம்.

இரத்த அழுத்தம் தான் பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. இவை நம் இரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட்ஸுக்கும் துணை நிற்கும். இதனால் உடல் முழுவதும் எளிதாக இரத்தம் ஓட்டம் ஏற்படும்.

பச்சை கோப்பி இயற்கையாகவே உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கிடும். கல்லீரலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிடும். கல்லீரல் தான் ஜீரணத்திற்கும் சத்துக்களை பிரித்து கொடுக்கும் பணியை மேற்கொள்கிறது என்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg