Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருவளையத்தைப் போக்க சில டிப்ஸ்

In
Published: 09:43 GMT, Sep 22, 2017 |
0 Comments
1311
This post was written by : Anojkiyan
what

தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.

பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும்.
ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடருடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கண்களுக்குக் கீழ் பூசுங்கள். கண்ணுக்குக் கீழ் தொங்கும் சதை, கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கண்களைக் குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையைக் கண்களை மூடி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

பாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைத்து சிறிது நேரம் உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg