Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு 10வது முறையாகவும் அனுசரணை வழங்கும் மஞ்;சி நிறுவனம்

In வணிகம்
Updated: 10:49 GMT, Sep 22, 2017 | Published: 10:49 GMT, Sep 22, 2017 |
0 Comments
1044
icon_com
This post was written by : Anojkiyan
photo

இலங்கை பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதான வர்த்தகநாமமான மஞ்சி நிறுவனத்தின் இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட  2017ஆம் ஆண்டிற்கான தேசிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு அனுசரணையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இச்சுற்றுப் போட்டியானது செப்டெம்பர் 30ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளதுடன், மாபெரும் இறுதிப்போட்டியானது 2017 நவம்பர் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. நாட்டின் தேசிய விளையாட்டிற்கான பெருமைமிக்க அனுசரணையாளர் என்ற வகையில், இவ்விளையாட்டை அபிவிருத்தி செய்து, பிரபலப்படுத்த மஞ்சி உதவியுள்ளது மட்டுமன்றி, நாடெங்கிலுமுள்ள வளர்ந்துவரும் இளம் வீரர்களுக்கு புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி, தேசிய தளமேடையொன்றையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் தேசிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நான்கு பிரிவுகளில் புதுமுக மற்றும் சூப்பர் லீக் போட்டிகளாக இடம்பெறவுள்ளன. இச்சுற்றுப்போட்டியானது முதலில் மாவட்ட மட்டத்திலும், அதன் பின்னர் தேசிய மட்டத்திலும் இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டிகள் நவம்பர் 18ஆம் திகதியன்று மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளரங்கில் இடம்பெறவுள்ளன.

இலங்கையில் முதன்முறையாக இலங்கை கரப்பந்தாட்ட சங்கமானது கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் திருகோணமலை அடங்கலாக பல்வேறு பிரதேசங்களில் வெளிப்புற மைதானங்களில் பல பிரத்தியேகமான போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.  இந்த மைதானங்களில் நாட்டில் முதல் 8 இடங்களிலுள்ள ஆண்கள் அணிகளும், முதல் 6 இடங்களிலுள்ள பெண்கள் அணிகளும் தமது விளையாட்டுத் திறமைகளை நேரே காண்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக பிரதான போட்டிகள் அனைத்தும் உள்ளரங்குகளிலேயே இடம்பெறுவதுடன், கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரே அதனை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

எனினும் கடந்த ஆண்டு மாநாட்டில் போட்டிகளை வெளிப்புற மைதானங்களில் ஏற்பாடு செய்வதால் உயர் மட்டப் போட்டிகளை பெரும் எண்ணிக்கையான ஆர்வலர்கள் நேரடியாக கண்டுகளிக்க வாய்ப்புக் கிடைக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்கமைவாக நாடெங்கிலுமுள்ள கரப்பந்தாட்ட ஆர்வலர்களை மகிழ்விக்க பல பிரத்தியேகமான போட்டிகள் வெளிப்புற மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு போட்டியில் 2,500 முதல் 3,000 வரையான அணிகள் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg