Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லண்டனில் உரிமத்தை இழக்குமா ஊபர்..

In
Updated: 13:09 GMT, Sep 22, 2017 | Published: 11:53 GMT, Sep 22, 2017 |
0 Comments
1433
icon_com
This post was written by : Risha
Uber

வாடகை கார் சேவைகளை வழங்கும் ஊபர் நிறுவனத்தின் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்கப் போவதில்லை என லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடகை கார் சேவையை வழங்கிவரும் தனியார் நிறுவனமான ஊபர், லண்டனில் தொடர்ந்து செயற்பட தகுதியற்றது எனத் தெரிவித்து உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊபரின் அணுகுமுறை மற்றும் நடத்தைகள் பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஊபர் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.

லண்டனில் சுமார் 3.5 மில்லியன் பயணிகள் மற்றும் 40 ஆயிரம் சாரதிகள் ஊபரை பயன்படுத்தி வந்த நிலையில், அமெரிக்க நிறுவனமான ஊபருக்கான உரிமம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg